பிபர்ஜாய்: 150 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் புயல், தயார் நிலையில் ராணுவம் – என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images15 ஜூன் 2023, 14:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலை கொந்தளிப்புடன் வைத்திருக்கும் பிபர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15ஆம் தேதி) மாலை குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கரையைக் கடக்கத் தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதைத்தவிர்த்து, பாகிஸ்தானின் கராச்சி நகரத்திலும் இப்புயலின் தாக்கம் காணப்படுகிறது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜாலோர் பகுதிகளில் புயலின் தாக்கம்…







