விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து உத்தராகண்ட்டிற்கு காரில் வந்த ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானார். இதையடுத்து அவருக்கு டேராடூனில் முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மும்பையில் தற்போது ரிஷப் பந்த்திற்கு சிகிச்சைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டது. காயத்திலிருந்து குணம் அடைவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் ரிஷப் பந்த் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. விக்கெட் கீப்பர் என்ற அடிப்படையில் ரிஷப்பின் இடத்தை எந்தவொரு வீரராலும் நிரப்ப முடியாத சூழலே காணப்படுகிறது.
Not bad yaar Rishabh ❤️❤️😂. Simple things can be difficult sometimes 😇 pic.twitter.com/XcF9rZXurG
— Rishabh Pant (@RishabhPant17) June 14, 2023
தற்போது உடல்நலம் தேறி வரும் ரிஷப் பந்த் படிக்கட்டுகளில் நடக்கக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இதையும் படிங்க – ‘ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும்’ – கங்குலி விருப்பம்
உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள்ளாக ரிஷப் பண்ட் களத்திற்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.