Monthly Archives: December, 2023

“இது பேய் நோய்… 5 வயசுல செத்துருவான்னு நினைச்சோம்… ஆனா…!'' நம்பிக்கை அளித்த நல்நிகழ்வு!

ஹெச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருப்பதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இயல்பாக வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான நிலை இல்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த குடும்பத்தாலேயே ஒதுக்கிவைக்கப்பட்டனர். குறிப்பாக ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. அப்படியான குழந்தைகளின் நல வாழ்வுக்காக 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது மருத்துவர் மனோரமா சென்னையில் நிர்வகித்து வரும் கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி Community Health Education…

Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்… ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? | Can Ayurvedic treatment benefit children who suffer from frequent colds?

Doctor Vikatan: என்  மூத்த மகளுக்கு எட்டு வயதும், இரண்டாவது மகளுக்கு நான்கரை வயதும் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் அடிக்கடி சளித்தொல்லை இருந்து வருகிறது. ஆங்கில மருந்துகள் எடுத்தாலும் 15 நாள்களுக்குள் மீண்டும் சளி வந்துவிடுகிறது. கடந்த நான்கைந்து மாதங்களாக ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து வருகிறோம், இருப்பினும் முழுவதும் குணமாகவில்லை. . துளசி, கற்பூரவள்ளி, தும்பை, குப்பைமேனி, அப்பகோவை சாறும் கொடுத்தோம்.  உணவுமுறை மாற்றம் பயன் தருமா? பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத  மருத்துவர்…

Sexual Health: பெண்களுக்குத் தாம்பத்யத்தில் விருப்பமின்மை… காரணங்களும் தீர்வுகளும்!

எல்லா பெண்களுமே வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தாம்பத்ய உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குடும்பத்தினர் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட தன் நலனுக்குக் கொடுக்காத பல பெண்கள், ‘தான் செக்ஸில் விருப்பமில்லாமல் இருக்கிறோம்’ என்பது தெரியாமலேயே அந்தக் காலகட்டத்தைக் கடந்திருப்பார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று, `18 முதல் 44 வயது வரையிலான பெண்களில் 3.3 சதவிகிதம் பேருக்கும், 45 முதல் 64 வயதான பெண்களில் 7.5 சதவிகிதம் பேருக்கும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படுகிறது’ என்கிறது. Couple…

Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை… சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன? I Is it better to take the tablets before brushing?

பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ, உணவு என சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக பெட் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போட வேண்டியதிருக்கும், அவர்கள் காலையில் எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு மாத்திரை போடுவது நல்லது. இல்லையென்றால் வாயில் தேங்கியிருக்கும் எச்சில் மாத்திரை விழுங்கும்போது தண்ணீருடன் சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றம், பற்களில் கறை, எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படும். பிரஷ்…

Doctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி' சிகிச்சை… யாருக்கு, எப்போது தேவைப்படும்?

Doctor Vikatan: நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்துக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாகவும் அதை குணப்படுத்த ட்ரக்கியாஸ்டமி என்ற சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். ட்ராக்கியாஸ்டமி என்பது என்ன மாதிரியான சிகிச்சை…. அது யாருக்கு, எப்போது செய்யப்படும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் கணையத்தில் கல் உருவாகுமா?’ட்ரக்கியா’ என்றால் காற்றுக் குழாய், அதாவது சுவாசக்குழாய்…இந்தக் குழாயில் சிறிய துளை போட்டு, ஒரு டியூபை செருகி, சுவாசத்தை முறைப்படுத்தச் செய்வார்கள்.…

குடி போதையில் தகராறு, மூளைக்குள் சென்ற சாப்ஸ்டிக்கை… மருத்துவர்கள் அதிர்ச்சி! I Chopstick found inside human brain

வியட்நாமைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவரின் மூளையில் சாப்ஸ்டிக் (chopstick) இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் சாப்ஸ்டிக் மூளையில் இருந்தது.சாப்ஸ்டிக்ஐந்து மாதங்களாகக் கடும் தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடியும் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த நபர். சி.டி ஸ்கேன் செய்த பிறகு, `மூளையில் அரிதான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பிரச்னை’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால், எதனால் அந்தப் பிரச்னை…

70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்… “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்” என உருக்கம் |70 year old Uganda woman gave birth to twins

சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.  செயற்கை கருவுறுதல்கோப்புப் படம் பொதுவாகப் பெண்களுக்கு 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைகிறது; ஆனால் மருத்துவத்தில்…

பெரிதாகும் காது துளை… இது மட்டும்தான் நிரந்தர தீர்வு! | Permanent remedy for enlarged ear hole

எனவே காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும். எடை அதிகமான கம்மல்களை தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும். காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.துளைகள் பெரிதான பிறகு அதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி. காது மடல்களில் எந்தத்…

அவசர சிகிச்சை, ஒன்றரை மணி நேரம் தாமதம்…. குழந்தை இறப்புக்கு காரணமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை..! | Toddler dies at NIMHANS after an alleged delay in treatment

நிம்ஹான்ஸின் ரெசிடென்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் ஷஷிதர், சோதனைகளை நடத்துவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.”குழந்தை மிகவும் மோசமாக இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க நாங்கள் முயன்றதால் தாமதம் ஏற்பட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.“குழந்தையை நிம்ஹான்ஸுக்கு அழைத்து வந்தோம், ஏனென்றால் நாங்கள் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டோம். குழந்தையை இங்கு கொண்டு வந்தவுடன் டாக்டர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் வரை மட்டுமே வந்து குழந்தையைப்…

`தோழிகளுக்குப் பிடிக்கல, எனக்கும் மாப்பிள்ளையப் பிடிக்கல…' திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு… பூவை தொடுத்து சேலை உடுத்தி பொண்ணும் வந்தாச்சு…” அப்புறம் என்ன கல்யாணம்தான் என்று நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில், திருமணம் செய்துகொள்ளும் ஜோடியைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிடித்து இருந்தால்தான் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும்.நல்ல விஷயம் குறித்து பேச்சு எடுத்தாலே அதுவரை இல்லாத சொந்தபந்தங்கள்கூட பத்திரிகை முதல் பந்தி வரை குற்றம் கண்டுபிடிக்க…

1 9 10 11 12