Monthly Archives: April, 2023

கருத்தடைக்கு பிறகு பெண்ணுக்கு பிறந்த குழந்தை; இழப்பீடாக ரூ. 3 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | woman who conceived after family planning

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வாசுகி. இவரின் கணவர் விவசாய கூலி வேலைகளைச் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2013-ம் ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை (Tubectomy) செய்திருக்கிறார், வாசுகி. இந்த நிலையில் 2014 மார்ச் மாதத்தில் கருத்தரித்து, 2015 ஜனவரியில், இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட நிலையிலும், மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த வாசுகி, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வாழ்க்கை…

PBKS vs LSG: 12-க்குக் குறைந்திடாத ரன்ரேட்; வேறு முகம் காட்டி மிரட்டிய லக்னோ, பதுங்கிய பஞ்சாப்!

லக்னோவின் ஸ்லோ பிட்சில் டேக் ஆஃப் ஆகவே தடுமாறும் லக்னோவின் பேட்டிங் யூனிட், மொகாலியில் தார்ரோட்டுக்கு இணையான பேட்டிங் பிட்ச் கிடைக்க, அங்கே உக்கிரமாக உருவெடுத்ததோடு பஞ்சாப்பையும் வீழ்த்தியுள்ளது.முரண்களின் பின்னல்தானே வாழ்க்கை. அதை விளக்குவதைப் போன்றே இயல்பு மாறிச் சிரிக்கும் கம்பீரையும், டென்ஷனை முகத்தில் காட்டும் தவானையும் இப்போட்டி காட்சிப்படுத்தியது. பந்துகளை உருட்டி விளையாடியே பழக்கப்பட்ட லக்னோவோ கொலைப்பசியோடு ரன்களைக் குவித்து ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவேற்றியது. இந்த சீசனில் முந்தைய மோதலில் பஞ்சாப்பிடம்…

Tamil Live Breaking News | வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..

29 Apr 2023 14:31 (IST)வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 29 Apr 2023 13:25 (IST)ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு, கனிமொழி…

Doctor Vikatan: தினமும் காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி… தீர்வு என்ன?| Doctor Vikatan: Headache when waking up … What is the solution?

இவை தவிர்த்து, கழுத்திலும் முதுகிலும் வலியை உணரச் செய்கிற ஸ்பைனல் தலைவலி (Spinal headache) என ஒன்று உண்டு. இப்படி தலைவலியில் பல வகை உண்டு. காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறது என்ற உங்களுடைய கவலைக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு வருவது எப்படிப்பட்ட தலைவலி என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் சிறந்தது.எனவே உங்களுடைய பிரச்னையை பொது மருத்துவரை அணுகி, ஆலோசித்து, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதன் பிறகு ஏதேனும் பரிசோதனைகள் தேவையா…

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? – சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் | csk skipper dhoni explains reason for the defeat against rr

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த…

ஸ்வீட் சாப்பிடும் க்ரேவிங்ஸை எப்படி கட்டுப்படுத்துவது..? உங்களுக்கான சில ஐடியாஸ்..!

பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரையில் எல்லோருக்குமே இனிப்புகள் என்றால் அலாதி பிரியம் தான். சாதாரண மிட்டாய்களில் தொடங்கி, பலகார வகைகள், ஜூஸ் வகைகள், உணவுகள் என சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லாமே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோய் அபாயம் மற்றும் இதர உடல்நல பிரச்சினைகளால் பலரும் சர்க்கரையை ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்ப்பது கட்டாய தேவையாக இருப்பினும், மற்ற எல்லோரும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல. அதே…

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். கணவர் சுயதொழில் பார்த்து வந்தார். கொரோனாவால் அந்தத் தொழிலை மொத்தமாக மூட வேண்டிய சூழல். நிலைமை சரியானபோதும் தொழில் பிக் அப் ஆகவில்லை. அந்நேரத்தில், பட்டதாரியான நான் வேலை தேட ஆரம்பித்தேன். வீட்டுக்கு மிக தொலையில் ஒரு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது கணவர் வீட்டில் இருந்ததால், 12, 14 வயதில் இருக்கும் எங்கள் இரண்டு குழந்தைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். Family வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், சந்தேக…

பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்- பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-வது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து பதோனி களமிறங்கினார். மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடியது. மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களும், பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர்.அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் பஞ்சாப் அணியின்…

தங்கராஜு சுப்பையா: தூக்கு தண்டனையின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்து பேசிய தாய்

பட மூலாதாரம், TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE26 ஏப்ரல் 2023சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா. போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட…

Chepauk: `நீயெல்லாம் மேட்ச் பார்க்கதான் வர்றியா?'- மாற்றுத்திறனாளிகளை மதிக்கத் தவறிய போலீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியிருந்தது. இந்த டிக்கெட் விற்பனையின்போது மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருந்தது.சேப்பாக்கம்வருகிற 30 ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்றைய தினம் காலை 9:30 மணிக்கு தொடங்கியிருந்தது. 1500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடில் சேப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு…

1 2 3 4 5 51