Monthly Archives: March, 2023

IND v AUS: கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியா ஆல் அவுட்; ஏறி அடிக்கும் ஆஸ்திரேலியா; முதல் நாள் எப்படி?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியாக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருந்தது.இந்திய அணியில் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுலுக்குப் பதில் கில் களமிறக்கப்பட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் முகமத் சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினார்கள்.…

வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். Source link

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்… ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறுகிறது!!

அகர்தலா :  திரிபுராவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் 80% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் பாஜக – திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.…

தாய்ப்பால் புகட்டுவதால் மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பலாம்! | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 10 | Breastfeeding can prevent breast cancer!

தாய்ப்பாலால் தாய்க்கு விளையும் நலன்கள்தாய்-சேய் பிணைப்புஆக்ஸிடோசின் (Oxytocin), புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன்கள், தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுத்தால், ஆக்ஸிடோசின் ஹார்மோன் மேலும் சுரந்து, கர்ப்பப்பை சுருங்கி, பிரசவத்துக்குப் பிந்தைய ரத்தப்போக்கைத் தடுக்கிறது. தாய், சேய் பிணைப்பு அதிகரிக்கிறது.எடைக்குறைப்பு கருத்தரிப்பு காலத்தில் தாய்க்கு 10 – 16 கிலோ வரை எடை கூடும். குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாகத் தாய்ப்பாலூட்டுவதால், உடலில் படிந்துள்ள கொழுப்பு சக்தி பயன்படுத்தப்பட்டு, தாய்மார்கள் கருத்தரிப்புக்கு…

IND vs AUS | இந்திய கேம்ப்பில் அமைதியோ அமைதி: வர்ணனையாளர் மேத்யூ ஹேடன் | calmness in indian camp commentator matthew hayden harsh criticism australia

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவின் போது முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் விமர்சித்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. அதன் மூலம் பார்டர்-கவாஸ்கர்…

பூண்டு தரும் இந்த 8 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரியுமா..?

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. நன்றி

மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் கேட்ட பிறந்த நாள் பரிசு – தேசிய அரசியலுக்கு அழைப்பு விடுத்த ஃபரூக் அப்துல்லா

7 மணி நேரங்களுக்கு முன்னர்2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின்…

மாற்று சக்தியை உருவாக்க இந்தியாவே மு.க.ஸ்டாலினை எதிர்பார்த்து காத்திருக்கிறது: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேச்சு

சென்னை: சென்னையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:சமூக நீதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்களை அணுகும் தமிழ்நாட்டின் போக்கை ஒட்டுமொத்த இந்தியாவும் கற்று கொள்ள வேண்டும்.  பாஜ அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நாட்டின் ஜனநாயகம்…

இந்த 3 விஷயம் பண்ணாலே 1 Month-ல Difference தெரியும்! – MUA Sridevi’s Weight loss Secrets | Diet Tips – makeup artist sridevi-s weight loss transformation secrets

Published:01 Mar 2023 4 PMUpdated:01 Mar 2023 4 PMHere in this video makeup artist sridevi shares her weightloss journery with us. she has lost 11 kgs in 50 days only by diet. she tells in detail about her diet routine and mistakes we do in weightloss. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு…

”என்ன இப்படி ஆகிடுச்சு” ஜடேஜா விக்கெட்டை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆனாதை பார்த்து கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சியடையும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பின் தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது. இந்திய அணியின்…