மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் கேட்ட பிறந்த நாள் பரிசு – தேசிய அரசியலுக்கு அழைப்பு விடுத்த ஃபரூக் அப்துல்லா

Share

திமுக, ஸ்டாலின், தமிழ்நாடு, பாஜக

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தேஜஸ்வி யாதவ் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தார். பிஹாரில் ஆளுநரின் உரை இருந்ததால் தாமதமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com