Monthly Archives: December, 2022

கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

மதுரை: கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன், சுவாமி சன்னதி உள்பட கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. Source link

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க எம்பிக்களை கொண்ட குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐ.ஐ.டியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 பேர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40 சதவீதம் மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68 சதவீதம் மட்டும் தான்.…

FIFA World Cup 2022 Round Up : எம்பாப்பேயின் அசுர வேகம் முதல் ஆஸ்திரேலிய கோச்சின் ஆதங்கம் வரை! |FIFA World Cup 2022 Round Up 6-12-2022

1. நேற்று, நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியும் போலந்து அணியும் அல் துமாமா மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில், பிரான்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. பிரான்ஸ் அணி வீரர் ஒலிவியே ஜிரூ 44 ஆவது ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 74 ஆவது நிமிடத்திலும், 91 ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார். ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒலிவியே ஜிரூ…

Doctor Vikatan: அடிக்கடி ஃபுட் பாய்சன்… காரணங்களும், தீர்வுகளும் என்ன?|Doctor vikatan – food poisoning… What are the causes and remedies?

ஃபுட் பாய்சனிங்கின் முதல் அறிகுறி வாந்தி. சிலருக்கு வயிற்றுப்போக்கும் இருக்கலாம். வயிற்றுவலி, வயிற்றை இறுக்கிப் பிடித்த உணர்வு, காய்ச்சல், தசைவலி, களைப்பு போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் அதே உணவைச் சாப்பிட்டிருப்பார்கள். ஒருவருக்கோ, இருவருக்கோ ஃபுட் பாய்சனிங் பாதிப்பு இருக்கலாம். மற்றவர்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். எனவே, இந்த பாதிப்பானது ஒருவரது நோய் எதிர்ப்பாற்றலையும் பொறுத்தது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ளோருக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்படாமலும் இருக்கலாம்.இந்தப் பிரச்னைக்குப் பெரும்பாலும் சிகிச்சைகள் தேவைப்படாது. எளிதில் செரிமானமாகும்…

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’ – விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் | Covid Was Man-Made Virus, Says Wuhan Lab Scientist In New Book

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தநிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்னும் ஆய்வுக்கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி சீனாவின்…

தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை; வாக்குக்காக அம்பேத்கர் புகழ்பாடும் பாஜக: சீமான் பேட்டி

சென்னை: வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வாக்குதான் காரணம், எந்த அளவிற்கும் பாஜக செல்லும். வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில்…

FIFA WC 2022 | கோல் மழை பொழிந்த பிரேசில் வீரர்கள் – தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. சொல்லப்போனால் கோல் மழை பொழிந்தனர் எனலாம். முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது…

குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ

சில்லி பீன்ஸ் சூப் : பீன்ஸ் விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை குக்கரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், 3 அல்லது 4 பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் அதனுடன் பீன்ஸ் விதை, ஊட்டி மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவையான…

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். முக்கியத்துவம்…

சத்துணவு திட்டத்தில் தற்போதைய நிலையே தொடர அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம்…

1 51 52 53 54 55 63