‘எப்படி வீரர்களை அலட்சியமாக கையாள முடிகிறது’; காயத்துடன் ஆயுஷ் -சிஎஸ்கே நிர்வாகத்தை சாடிய அஷ்வின் | Ravichandran Ashwin slams the Chennai Super Kings management as Ayush plays while injured

Share

இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஷ்வின், “ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார்.

அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை.

வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதைத் தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இன்ஜூரி மேனேஜ்மென்ட்டின் வேலை.

ஆயுஷ் மாத்ரே காயம்

ஆயுஷ் மாத்ரே காயம்

களத்தில் அவர் தடுமாறியபடி இருக்கிறார், உங்களுடைய பிசியோதெரபிஸ்ட்டுகள் வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்குபிறகும் அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைக்கிறீர்கள்.

இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாள முடிகிறது” என்று சிஎஸ்கே நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com