ஷ்ரேயாஸ் கேப்டன்சி: பஞ்சாப் கிங்ஸ் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்? 5 முக்கிய விஷயங்கள்

Share

பஞ்சாப் கிங்ஸ், ஐபிஎல், ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ் தான்

நியூ சண்டிகரில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

2026 ஐபிஎல் சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. இன்னொரு போட்டி மழை காரணமாக தடைபட்டது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணி பஞ்சாப் கிங்ஸ் மட்டும்தான்.

அந்த அணியின் முதல் 4 வெற்றிகளுமே சேஸ் செய்தபோது வந்தவை. அதில் 2 போட்டிகளில் 200+ ஸ்கோரை எளிதாக சேஸ் செய்தது அந்த அணி. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 196 என்ற இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து வென்றது.

இப்படி ஆதிக்கம் செலுத்தி சேஸ் செய்துகொண்டிருந்த அணி, லக்னோவுக்கு எதிரான போட்டியில் தான் இந்த சீசனில் முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது. அதிலும் 254 ரன்கள் குவித்து இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இந்த சீசனை வலுவாகத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் சில வேகத்தடைகளை சந்தித்திருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் யாருக்குமே தடுக்க முடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com