ஷி ஜின் பிங்குடன் கைகுலுக்கிய டிரம்ப் – சீனாவில் உற்சாக வரவேற்பு

Share

ஷி ஜின் பிங்

பட மூலாதாரம், CGTN

படக்குறிப்பு, கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் கட்டடத்தில் டிரம்பை வரவேற்ற ஷி ஜின்பிங்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் வந்தடைந்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ எனும் அரச கட்டடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான வரவேற்பு விழா அமெரிக்க அதிபரின் முதல் அதிகாரபூர்வ நிகழ்வாக இருக்கும்.

டிரம்ப் தற்போது அங்கு சென்றடைந்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் கைகுலுக்கினார்.

கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் என்பது தியானன்மென் சதுக்கத்துக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு அரசு கட்டடமாகும். இது பிற அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும், வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மாலையில் அரச விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com