வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் ஆப்கன் அணி வெற்றி பெறுவதற்கு 662 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்வென்ற ஆப்கன் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 86 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷாண்டோ 146 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கன் அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2 ஆவது இன்னிங்ஸில் அதிரடியாக ரன்களை சேர்த்த வங்கதேச வீரர்கள் ஒருநாள் போட்டியை போன்று ரன்கள் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஷாண்டோ 2 ஆவது இன்னிங்ஸிலும் 124 ரன்கள் எடுத்து அசத்தினார். மோமினுல் ஹக் 121 ரன்கள் எடுக்க 80 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 425 ரன்கள் குவித்தது.
Quick Run | Day 03
Walton Test Match | Bangladesh vs Afghanistan | Only Test #BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/wN5onc7Fso
— Bangladesh Cricket (@BCBtigers) June 16, 2023
இதையடுத்து 662 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆப்கன் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க – டெஸ்டில் வினோதமான முறையில் விழுந்த விக்கெட்… கவனம் பெறும் வீடியோ
இன்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கன் அணி 11 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதம் உள்ளதால் வங்கதேச அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.