ராகுல், ஸ்டார்க் அபாரம் – 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

Share

இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 43வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 1) எதிர்கொண்டது டெல்லி கேபிட்டல்ஸ். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. 9 போட்டிகளில் நான்கில் வென்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. 10 போட்டிகளில், 12 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ரவி பிஷ்னாய் மற்றும் ஷுபம் துபே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பதும் நிசன்கா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சீசனில் ஸ்டார்க் ஆடும் முதல் போட்டி இது. முன்னணி வீரர் டேவிட் மில்லர் இந்தப் போட்டியில் ஆடவில்லை.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் விளாசியது. ரியான் பராக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார். டெல்லி பௌலர்களில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த இலக்கை சேஸ் செய்த டெல்லி கேபிட்டல்ஸ், 19.1 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்தது. அந்த அணியின் ஓப்பனர்கள் பதும் நிசன்கா, கே.எல்.ராகுல் இருவரும் அரைசதம் அடித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com