கோவை சிறுமுகையில் தாயை பிரிந்த குட்டியானையை பிற மந்தைகள் ஏற்காமல் விரட்டுவது ஏன்?

Share

சிறுமுகையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை பிற மந்தைகள் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டுவது ஏன்?

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வனத்துறையால் மீட்கப்பட்ட குட்டி யானை (கோப்புப் படம்)

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை காட்டு யானைக் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், யானை மந்தையில் அந்தக் குட்டியைச் சேர்க்கும் முயற்சிகளுக்குப் போதிய பலன் கிடைக்காத நிலையில், நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.

“அந்தக் குறிப்பிட்ட குட்டி யானை பிறந்து மூன்று மாதங்களே ஆகிறது. அந்த குட்டி யானை வாழ்வதற்குத் தேவையான சூழல் காடுதான் என்பதால் அதனை ஏதேனும் ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை மிகத் தீவிரமாக அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சிகளுக்கு எத்தகைய பலன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தக்கட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்,” என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ.

குட்டியை விரட்டிய ஆண் யானை

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, கந்தவயலில் உள்ள சாலையோர சோதனைச் சாவடி அருகே, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து அலைந்து கொண்டிருந்த குட்டி யானையை வனத்துறை கண்டது.

வனத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். டிரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் காட்டுக்குள் ஒரு யானை மந்தை இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தக் குட்டி வழிநடத்தப்பட்டு, அந்த மந்தைக்கு அருகில் விடப்பட்டது. அதே நேரத்தில், இரவு முழுவதும் டிரோன்கள் மற்றும் வெப்ப கண்காணிப்பு மூலம் குழுவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com