பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அறிவியல் உண்மை

Share

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

பட மூலாதாரம், Facebook/JMScindia/Getty Images

படக்குறிப்பு, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது சட்டைப்பையில் வெங்காயம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.

இந்த கருத்தை தெரிவித்த பிறகு, ஜோதிராதித்ய சிந்தியா சமூக வலைதளங்களில் கேலிக்கு ஆளாகியுள்ளார். இந்தத் தாங்க முடியாத வெப்பத்திலிருந்து தப்பிக்க வெங்காயம் எப்படிப் பயன்படும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏப்ரல் 26 அன்று தனது குணா மக்களவைத் தொகுதியின் பிச்சோர் நகரில் ஒரு தாலுகா அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய அவர், “நீங்கள் ஒரு வெங்காயத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நான் எனது காரில் ஏசி பயன்படுத்துவதில்லை, ஏசி இருக்கும் சூழலில் அமருவதும் இல்லை” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com