இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்றது.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தென் கொரியா இணையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இறுதி போட்டியில் மலேசியாவின் கங்மின், சியோ சியூங் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 21க்கு 17, 21க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை தன்வசமாக்கினர். இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய அணி தங்கம் பெற்றிருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.