தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் 2000 முதல் 2007 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அணியைச் சிறப்பாக வழி நடத்தி வந்த ராகுல் டிராவிட் ஒரு கட்டத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.
அப்போது அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்ததால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு சரத் பவார் சச்சினிடம் கோரிக்கை விடுத்தார். சச்சின் அதனை மறுத்து, தோனியின் பெயரைப் பரிந்துரைத்தார் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி எவ்வாறு கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்திருக்கிறார்.