சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றபடி செய்ய கேழ்வரகு மசாலா ரொட்டி.. காலை உணவாக செய்து கொடுங்கள்..!

Share

ஒவ்வொரு இல்லத்தரசிகளின் ஒரே நோக்கம் சமைக்கும் உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பதுதான். ஏனென்றால், உணவை விட சிறந்த மருந்தாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்தவகையில், உடல் எடை குறைப்பு முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ஒரு ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, சர்க்கரை நோயாளிகளை காக்கும் கேழ்வரகு மசாலா ரொட்டி எப்படி தயார் செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, மிகவும் ஆரோக்கியமானது. இதை காலை உணவாகவும், மாலை சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1/2 கப்.

கேழ்வரகு மாவு – 1/2 கப்.

பாகற்காய் – 1.

பசலைக் கீரை – 1 கைப்பிடி.

பெருங்காய தூள் – 1 ஸ்பூன்.

காலிப்பிளவர் – ஒரு கைப்பிடி.

பச்சை மிளகாய் – 2.

இஞ்சி – 1 இன்ச் அளவிற்கு.

உப்பு – 1/2 ஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

ரொட்டி செய்வதற்கு முன்னதாக, ரொட்டி செய்ய எடுத்துக்கொண்ட ராகி, கோதுமை மாவினை நன்கு சலித்து சுத்தம் செய்யவும். பின்னர், இவற்றை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

இதனிடையே, பாகற்காய், காலிப்பிளவர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அதேப்போன்று, எடுத்துக்கொண்ட பசலை கீரையினையும் தண்டு நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும். அதே நேரம், இஞ்சியினை தோல் நீக்கி சுத்தம் செய்து, இடித்து வைத்துக்கொள்ளவும்.

Also Read | கொத்தமல்லி இலையை 2 வாரம் வரை அழுகாமல் வைத்திருக்க டிப்ஸ்..!

தற்போது மாவு உள்ள பாத்திரத்தில் உப்பு, நறுக்கிய காய்கறிகள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

இறுதியாக சிறிதளவு எண்ணெய் சேர்த்து இந்த மாவினை பிசைந்து, ஒரு 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர், சிறு – சிறு அளவுகளில் இந்த மாவினை பிரித்து எடுத்து, ரொட்டி வடிவத்திற்கு உருட்டி தயார் செய்துக்கொள்ளவும்.

உருட்டி வைத்த இந்த சேர்மத்தினை தற்போது, ஒரு தோசை சட்டியின் எண்ணெயுடன் சேர்த்து சுட்டு எடுக்க சுவையான ராகி மசாலா ரொட்டி தயார். தயிர், சட்னி என உங்களுக்கு பிடித்த ஸைட் டிஸ்ஸுடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com