கடத்தல் தங்கம்: 17.7 கிலோ பொட்டலங்களை கடலில் வீசிய நபர்கள் – முத்துக்குளித்து மீட்ட ஸ்கூபா டைவர்கள்

Share

தங்கம் கடத்தல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்க கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திலிருந்து கஞ்சா, ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், ஏலக்காய், வலி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகள் மன்னார் வளைகுடா கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம், மண்டபம் கடற்கரை பகுதிக்கு கடத்தி வரப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இலங்கையிலிருந்து கடத்தல் தங்கம் நாட்டுப்படகில் மண்டபம் அடுத்துள்ள வேதாளைக்கு கடத்தி வர இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com