ஒலிம்பிக்ஸ் தடம்; அர்ஜுனா விருது; ஆசிய அளவில் முதல் பதக்கம்; சாதிக்கும் தமிழர் பவானி தேவி!|Bhavani Devi becomes first Indian fencer to win medal in Asian Championships

Share

பவானி தேவி படைத்த இந்த வரலாற்று சாதனைக்கு விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று பதக்கம் வென்றது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நீங்கள் கூறியதுப்போல ” எல்லா முடிவுகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கிறது”.

#Tokyo2020 ஒலிம்பிக்ஸில் உங்களுடைய அளப்பரிய சாதனையும், அந்த தினத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியும், இந்தியாவின் மிகப்பெரிய கனவுகளை நனவாக்குவதற்கான படிக்கட்டுகள். சக விளையாட்டு வீரர்களுக்கும் நீங்கள் உத்வேகத்தை அளிக்கிறீர்கள். உங்களின் இந்தப் பயணம் இந்திய வாள்வீச்சு போட்டிக்கு புதிய பாதையை வகுக்கிறது. தற்போது நீங்கள் படைத்த இந்த சாதனைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் நிறைய சாதனைகளைப் புரிய வேண்டும்.’ என்று பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com