இரவு உணவுக்கு என செய்வது என்பதே பெரிய தலைவலி. இட்லி, தோசை, சப்பாத்தியை செய்து போர் அடிக்கும். மாதத் தொடக்கத்தில் வித்தியாசமாக கடையில் எதாவது வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அதுவே மாத கடைசி ஆகிவிட்டால், இருக்கும் பட்ஜெட் வைத்து எங்கே வெளியே சாப்பிடுவது? அப்போது வெளியில் சாப்பிட்ட டிஷ்களை வீட்டிலேயே செய்தால் என்ன என்ற எண்ணம் எழும்.
அப்படி யோசிக்கும்போது என்ன செய்வது? எதை வீட்டில் எளிமையாக செய்யமுடியும்? சுவையாகவும் இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதிகம் செலவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்று கணக்கு போடுவோம். அதற்கு தான் ஒரு ரெசிபியை உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம்.
குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறிகளை பொரியல் செய்து கொடுப்போம். வீட்டில் இருந்தால் ஊட்டிவிட்டோ அல்லது கொஞ்சம் கண்டித்தோ சாப்பிட வைத்து விடுவோம். பள்ளிக்கு சென்றால் தெரியாது. இப்படி இருந்தால் ஊட்டச்சத்துகள் கிடைக்காது அல்லவா? அதையே கொஞ்சம் மாதிரி வேறு விதமாக கொடுத்தால்.. அப்படியான ரெசிபி தான் சொல்ல இருக்கிறோம்.
பீட்ரூட் உத்தப்பம் செய்யத் தேவையான பொருட்கள்:
-
2 கப் சாதாரண இட்லி / தோசை மாவு
-
2 சிறிய பீட்ரூட்
-
1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
-
1 சிறிய தக்காளி, பொடியாக நறுக்கியது
-
1/2 குடைமிளகாய் , பொடியாக நறுக்கியது
-
3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
-
சமையலுக்கு எண்ணெய்
-
சுவைக்கு உப்பு
-
அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்
பீட்ரூட் ஊத்தாபம் செய்முறை:
பீட்ரூட்டை சின்னத் துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு மையாக அரைக்கவும். கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இட்லி/தோசை மாவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். தேவைப்பட்டால் மாவை மெல்லியதாக தண்ணீர் சேர்க்கவும். ஆனால் உத்தபங்களுக்கு வழக்கமான தோசைகளை விட கெட்டியான மாவு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மாவும் பீட்ரூட்டும் நன்றாக சேரும் வரை மாவை கலக்கிக்கொள்ளவும். பின்னர் ஒரு சூடாக்கப்பட்ட நான்-ஸ்டிக் தவாவில் ½ தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். ஒரு பெரிய கரண்டி மாவை அதன் மீது ஊற்றி வழக்கமான உத்தபம் போல, மாவை தடிமனாக வார்க்கவும். மேலே சிறிய அளவில் நறுக்கிய காய்கறிகளை (வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய்) சேர்த்து, மாவில் லேசாக அழுத்தவும்.
இதையும் பாருங்க :
பனீர் பாப்கார்ன் முதல் லாலிபாப் வரை… பனீரை வைத்து செய்யும் 5 ஸ்னாக்ஸ் ரெசிபீஸ்..!
சிறிது உப்பு தூவிவிட்டு. தடிமனான உத்தாபத்தின் ஓரங்களில் அதிக எண்ணெய் சேர்க்கவும். சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்கவும். உத்தாபம் லேசாக பழுப்பு நிறத்தில் மாறியதும் அதை திருப்பி மறுபுறம் சமைக்கவும். காய்கறிகளை தீய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :