இலங்கையில் சீன திட்டங்களுக்கு முட்டுக்கட்டை என சீனத் தூதுவர் இந்தியாவை விமர்சிக்கிறாரா?

Share

இலங்கை, சீனா, முதலீடுகள், வேலைவாய்ப்புகள், திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நில மீட்புத் திட்டத்தின் கட்டுமானத்தளம்.(கோப்புப்படம்)

    • எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’ நடவடிக்கைகளைத் தமது நாடு வன்மையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு, 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தீவுகளில் திட்டமிடப்பட்ட மின்சாரத் திட்டம் நிறுத்தப்பட்டதால் சுமார் பத்தாயிரம் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே போட்டி

இலங்கை, சீனா, உயர் ஆணையர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங்

சீனத் தூதுவரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வெறும் நிலப்பரப்பாக அன்றி, இருபெரும் ஆசிய நாடுகளுக்கிடையேயான போட்டி பிராந்தியமாக மாறியுள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 2019-இல் யாழ்ப்பாணத் தீவுகளில் தொடங்கவிருந்த சீன மின்சக்தித் திட்டம் இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக இந்தியா அண்மையில் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தில் தனது சொந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதனைச் சீனா “பிராந்திய மிரட்டல்” எனக் குறிப்பிட்டாலும், இந்தியாவின் பார்வையில் இது தனது “பிராந்திய பாதுகாப்பு” தொடர்பான விவகாரமாகும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகிலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை உள்ளடக்கிய ‘கலப்பு மின் உற்பத்தி’ திட்டத்தை முன்னெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை சீனாவின் ‘சினோசார்-எடெக்வின்’ நிறுவனம் வென்றிருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com