Urvashi: ‘மைக்கேல் மதன காம ராஜன்’ திரைப்படத்தின் நினைவுகளை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஊர்வசி | Urvashi Sharings | Kollywood | Tamil Cinema

Share

ஊர்வசி பேசுகையில், ” ‘கை வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலில் கமல்ஹாசன் என்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டும் விழ வேண்டும்.

ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கமல்ஹாசன் நேரடியாக வந்து என் காலிலும் விழுந்துவிட்டார்.

அந்தச் சமயத்தில் நான் திடீரென்று ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு துள்ளிவிடுவேன்.

இது முன்கூட்டியே யாரும் திட்டமிடாத ஒரு இயல்பான தருணம்” எனச் சிரித்துக்கொண்டே கூறினார்.

மேலும் பேசிய அவர், “அவர் என்னை திறமையான நடிகை என்று பலமுறை கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் எனக்கு மிக உற்சாகமாக இருந்தன. இன்று வரை சினிமாவில் பெரிய கதாநாயகியாகப் பயணம் செய்வதற்கு அந்தப் பாராட்டுதலே காரணம்.

அவர் எப்போதும் திறமைகளை அடையாளம் கண்டு பாராட்டும் நல்ல மனம் கொண்ட கலைஞர்.

அவரது அன்பும் பாராட்டும் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்தன.” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com