ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்’- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்| Helicopter Crash: ‘He lay on my chest for 6 hours’ — Groom dies just hours after his wedding.

Share

மணமக்கள் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அடர்ந்த வனப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜெஸ்னி விபத்துக்குப் பின் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தன் மார்பின் மீது சாய்ந்திருந்த கணவர் டேவ்வின் உடல் குளிர்ந்து போயிருந்ததையும், அவர் உயிரிழந்துவிட்டதையும் உணர்ந்துள்ளார். விபத்து நடந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவித்த மணமகள் ஜெஸ்னி, பின்னர் மீட்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக ஜெஸ்னிக்கு எலும்பு முறிவுகள் ஏதுமின்றி, லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து நடப்பதற்கு முன்பாக, அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் வானிலை மோசமாக இருப்பதை கவனித்த மணமகன் டேவ், “Zero Visibility இருக்கும்போது நாங்கள் விமானத்தை இயக்க மாட்டோம், தற்போதைய சூழல் பறப்பதற்கு உகந்தது அல்ல’ என்று பைலட்டிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அந்த ஹெலிகாப்டர் பைலட், நாம் சற்று கூடுதல் உயரத்தில் பறக்கலாம் என்று கூறி ஹெலிகாப்டரை இயக்கியதாக, சிகிச்சையில் இருக்கும் ஜெஸ்னி தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com