NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

Share

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு பதிலாக, மௌரியர்கள், சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத மரபுகள், கலாச்சார மரபுகள் மற்றும் புனித தலங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முந்தைய பாடதிட்டங்கள், இடைக்கால இந்தியாவின் வரலாற்றை இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் முகலாய நிர்வாகத்தின் பார்வையில் அறிமுகப்படுத்தியது. இதிலிருந்து புதிய பாடத்திட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்று சுவரோவியம்

இந்திய வரலாற்று சுவரோவியம்
canva

என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?

7ம் வகுப்பு பாடத்திட்டம், “இந்தியாவும் உலகமும்’, ‘கடந்த கால திரைச்சீலைகள்’, ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்’, ஆட்சி மற்றும் ஜனநாயகம், ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை’ ஆகிய 5 கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.

புதிய பாடத்திட்டத்தின் படி, இந்தியாவின் வரலாறு பாரம்பரிய யுகத்தில் (பொ.ஆ 6ம் நூற்றாண்டு) முடிகிறது.  சாதவாகனர்கள், அசோகர் மௌரிய பேரரசில் கவனம் செலுத்துகிறது. சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com