IPL Auction 2023: ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன பென் ஸ்டோக்ஸ் – சி.எஸ்.கே தட்டித் தூக்கிய ஜாக்பாட்! | IPL 2023 player auction: Chennai Super Kings get Ben Stokes amidst heavy competition

Share

கடந்த சீசன் ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. முதன் முறையாக 2017-ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில்தான் அவர் களமிறங்கினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 316 ரன்கள், 12 விக்கெட்டுகள் எடுத்து மிகுந்த விலைமதிப்புள்ள வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனே அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் சி.எஸ்.கே அணியில் பென் ஸ்டோக்ஸ்க்கு நிச்சயம் கை கொடுக்கும். அது மட்டுமின்றி, தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறவிருப்பதால் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே-வின் எதிர்கால கேப்டனாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவரை சென்னை வாங்கியது சிறந்த முடிவு என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 43 ஆட்டங்களில் 920 ரன்களும், 28 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். கடந்த உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com