IPL 2026: “இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை.!”- விராட் கோலி| “IPL 2026: ‘This 9th century makes me happy, but I don’t…!’ – Virat Kohli

Share

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற கொல்கத்தா vs பெங்களூரு போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் விராட் கோலி.

இவரின் இந்த சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி, 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது பெங்களூரு அணி.

விராட் கோலி

விராட் கோலி

வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, “இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஏனென்றால் தற்போது புள்ளிப் பட்டியலில் எங்களுக்கு ஒவ்வொரு புள்ளியும் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

அணிக்காகப் பங்களிப்பது மற்றும் நான் நீண்ட நேரம் களத்தில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து விளையாடுவது எனது கடமை. கடந்த இரண்டு போட்டிகளில் நான் சரியாக ரன் எடுக்காதது என்னை ஒருவிதத்தில் பாதித்தது, சதம் அடிக்கிறோமா இல்லையா என்பதை விட, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து அந்த 2 புள்ளிகளைப் பெறுவதே எனக்கு முக்கியம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com