ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின.
இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
“யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன.
எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே இது நடக்கின்றது.
இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. இதுதான் இங்கு நிலைமையாக இருக்கின்றது.