Doctor Vikatan: முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? | Doctor Vikatan: Can collagen supplements delay the appearance of aging?

Share

Doctor Vikatan: என் வயது 45. மீடியா தொடர்பான வேலையில் இருக்கிறேன். சரும அழகைத் தக்கவைத்துக்கொள்ள கொலாஜென் சப்ளிமென்ட் எடுக்கலாமா? அது ஆன்டி ஏஜிங் பலனைத் தருமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

சமீப காலமாக சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கொலாஜென் சப்ளிமென்ட் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. அது குறித்து நிறைய பேசப்படுகிறது.

கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கக்கூடிய புரதம். அது போதுமான அளவில் இருந்தால்தான் நம் சருமம் தொய்வடையாமல், முதுமைத்தோற்றம் அடையாமல், டைட்டாக இருக்கும்.

அனைத்துவகையான ஆன்டி ஏஜிங் சிகிச்சைகளும் கொலாஜெனை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. மைக்ரோ நீடிலிங் சிகிச்சை, லேசர் சிகிச்சை என எல்லாவற்றிலும், கொலாஜெனை புதுப்பித்து, சரும ஆரோக்கியம் மீட்கப்படும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com