சிலருக்கு இது ‘ப்ரீ டயாபட்டீஸ்’, அதாவது நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் குழந்தைகளுக்கும் இது நீரிழிவு வரப்போவதன் அறிகுறியா என்றால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும்.
வாழ்க்கைமுறை சரியில்லாதவர்களுக்கே இந்தப் பிரச்னை பெரிதும் பாதிக்கும். உதாரணத்துக்கு அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம்.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ‘க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா’ என்றெல்லாம் பலரும் கேட்பார்கள். உண்மையில் அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடும்போதும், அதிகப்படியான எடையைக் குறைக்கும்போதும் இந்த பாதிப்பு குறைவதுடன், சரும நிறம் இரண்டு, மூன்று ஷேடுகள் அதிகரிப்பதையும் பார்க்கலாம்.
கழுத்து, முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், முகம், நெற்றி போன்ற இடங்களிலும் இந்த பாதிப்பு வரலாம். அதிக மாவுச்சத்தும், இனிப்பும் உள்ள உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடப் பழக வேண்டும்.
குழந்தைகளுக்கு காலை முதல், இரவு வரை ஆக்டிவ்வாக இருக்கும் விஷயங்களைப் பழக்க வேண்டும். பெரியவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் மேல்பூச்சுக்கான சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். இரண்டையும் சேர்த்துப் பின்பற்றும்போது நல்ல பலன் தெரியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.