Champions Trophy : நெருங்கும் டெட்லைன்; மைதானங்களை ரெடி செய்யாத பாக்?- சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?| Stadiums are not ready Champions Trophy 2025 in Pakistan
கடைசியில் எதிர்பார்த்ததை போலவே பிசிசிஐக்கு சாதகமாகத்தான் ஐ.சி.சி முடிவை எடுத்தது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் துபாயில் நடக்குமென்றும் மற்ற போட்டிகளெல்லாம் பாகிஸ்தானில் நடக்குமென பஞ்சாயத்தை பேசி முடித்து பைசல் செய்தது ஐ.சி.சி. பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று நகரங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த மைதானங்களில் பராமரிப்புப் பணிகளை செய்யும் வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இறங்கியது. அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது. ஜனவரி 31 க்குள் மைதானத்தின் பராமரிப்புப்…









