சென்னை: டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை – பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர் – youth arrested in woman harrssment case
சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர், தன்னுடைய பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மனவேதனையடைந்த இளம்பெண், அடையாறு அனைத்து மகளிர் காவல்…









