Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்… பிரியாணியில் எது ஹெல்த்தி?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது பிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான் கேட்கிறார்கள். உண்மையில், பிரியாணியில் எது பெஸ்ட், எது ஆரோக்கியமானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.அம்பிகா சேகர்பிரியாணி பிரியர்களைக் கேட்டால், மட்டன் பிரியாணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளைக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கிறது மட்டன் பிரியாணி. அதை சுவையாகவும் சமைக்க முடியும். சுவையில் சூப்பராக இருக்கும் மட்டன் பிரியாணி, ஆரோக்கியத்திலும் சிறப்பானதா என்பதுதான்…









