Shivam Dube: `கஷ்டப்படுற காலத்துல ஒவ்வொரு பைசாவும் ரொம்ப முக்கியம்'- இளம் வீரர்களுக்கு துபே அறிவுரை!
‘உதவித்தொகை வழஙகும் நிகழ்வு!”‘கஷ்டப்படுற காலத்துல நமக்கு கிடைக்குற ஒவ்வொரு பைசாவும் மதிப்புமிக்கது.’ என தனது சிறுவயதை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் சென்னை அணியின் வீரர் சிவம் துபே. சிவம் துபே’நிகழ்வின் பின்னணி!’தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கத் தொடங்கியிருக்கும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த இளம் திறமையாளர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 30,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், சென்னை…









