வைபவ் சூர்யவன்ஷிக்கு சேவாக் ‘அலர்ட்’ அறிவுரை – ‘ஒரு சீசனில் கலக்கிவிட்டு காணாமல் போவாய்!’ | sehwag advise to young cricketer viabhav suryavanshi ipl 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது புதிய சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து அனைத்து ஊடகங்களும் செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை உடன்பாட்டுத் தொனியில் எச்சரிக்கும் விதமாக சில கருத்துகளைக் கூறியிருப்பது வைரலானது. ஐபிஎல்-ன் இளம் வீரராக அடியெடுத்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி, அன்று தன் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே லக்னோவுக்கு எதிராக சிக்ஸருக்கு அனுப்பி அசத்தினார். அதுவும் அனுபவ…









