Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா,…








