Browsing: விளையாட்டு

“முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை”- அஷ்வின் ஆதங்கம் | cricket player Ravichandran Ashwin speaks about Murali Vijay and pujara

அந்தவகையில் தற்போது தமிழக வீரரான முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை  யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். முரளி விஜய்இதுதொடர்பாக பேசிய அவர், “2011- 2015 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் முரளி விஜய். என்னைப் பொறுத்தவரை சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் ஒரு  மிகசிறந்த தொடக்க வீரர். கவாஸ்கர், வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு தொடக்க டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுக்கு மேல் பதிவு செய்த ஒரே இந்திய வீரர் இவர்தான். இந்திய அளவில் மட்டுமின்றி உலக…

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன | Tickets for India vs Australia 2nd Test are sold out

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில்…

'கங்குலிக்கும் கோலிக்கும் பிரச்னை.. ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள்' – பரபரப்பை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!

Chetan Sharma : தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் பேசியது அம்பலமானது. நன்றி

“கங்குலி vs கோலி சர்ச்சை; உடற்தகுதி காட்ட ஊசியா?”- பகீர் ரகசியங்களைக் கசிய விட்டாரா சேத்தன் சர்மா? | Chetan Sharma reveals shocking information about the Indian Cricket Team in a sting operation

‘‘இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். டி20 அணியில் இனி ரோஹித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக ஆவார்!” என்று தெரிவித்துள்ளார்.ஜஸ்பிரித் பும்ராRui Vieira”ஜஸ்பிரித் பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை. அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக்…

“குழந்தைகள் அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம்” – ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பகிர்ந்த பந்த் | way kids express love amazing rishabh pant shares valentines day greets by fans

புது டெல்லி: காதலர் தினத்தை முன்னிட்டு இளம் ரசிகர்கள் தனக்கு பகிர்ந்த வாழ்த்து அட்டைகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். அதில் குழந்தைகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம் என சொல்லியுள்ளார் பந்த். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பந்த் தற்போது ஓய்வில் உள்ளார். அவர் களம் திரும்ப எப்படியும் சில காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவருக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் ஷ்ரேயாஸ் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர் யார்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நிலையில் 2ஆவது போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடிய சூர்ய குமார் யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், 2ஆவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன்…

WPL Auction: 409 வீராங்கனைகள்; 90 இடங்கள்; தொடங்குகிறது உமன்ஸ் ப்ரீமியர் லீக் ஏலம்!

2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே கிரிக்கெட் தொடரை BCCI முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30…

WPL ஏலம் ஹைலைட்ஸ் | எந்த அணியில் யார், யார்? – முழு விவரம்

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர். வரும் மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க…

செல்பிக்கள், குரூப் போட்டோ.. அன்புடன் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் வீராங்கனைகள்

2023 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் அணி மகத்தான சாதனையை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியதால் போட்டியில் அனல் பறந்தது.டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள்…

“பலவற்றைக் கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது!”- இயான் மோர்கன் | Former England captain Eoin Morgan retires from all forms of cricket

இதுதொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்து விதமான  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குப் பலவற்றைக்  கற்றுக்கொடுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான நேரம் இது. 2005-இல் Middlesex அணியில் தொடங்கி SA20 லீகில் Paarl Royals அணிக்காக விளையாடியது வரை ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன். எனது வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டபோது என் குடும்பத்தினரும், நண்பர்களும்தான் ஆதரவாக இருந்தனர்.குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி…

1 303 304 305 306 307 444