Browsing: விளையாட்டு

டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் நீக்கம்…

டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை தேர்வுக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். இதையடுத்து ராகுலை டி20 போட்டிகளில் இருந்து நீக்கி தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டது.இன்னொரு பக்கம், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்கள்…

INDvsAUS டெஸ்ட் அலசல்: ஆஸி.யை காலி செய்த ஸ்வீப் ஷாட்கள்; இந்திய அணியின் முழு ஆதிக்கம்! | india won the 2nd test match against Australia here decoding match result

டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துள்ளது. இதற்கு பிட்ச் ஒரு காரணம் என்றால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் மட்டரகமான பேட்டிங் பிரதான காரணமாகும். பிட்சைக் குறை கூறிப் பயனில்லை. இனி இந்தப் போக்கை யாரும் தட்டிக் கேட்கப்போவதுமில்லை. ஆகவே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் என்பது ரஞ்சி டிராபியை விடவும் மோசமாக இரண்டரை நாட்கள்தான் என்பது வழக்கமாகி வருவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இப்போது சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா,…

ஜடேஜா சுழலில் சிக்கிய சிதறிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.. வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில்  கடந்த  17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து அஸ்வின் – அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல்…

1,100 மாணவர்கள் பங்கேற்றுள்ள ஜூடோ சாம்பியன்ஷிப் தொடக்கம் | Judo Championship begins with 1,100 students participating

சென்னை: தேசிய சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன், ஜூடோ ஃபெடரேஷன் இந்தியா, இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் 28 மாநிலங்களில் இருந்து 1,100 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 2500- க்கும் மேற்பட்ட போட்டிகளில் மோதுகின்றனர். இந்த போட்டிகளை நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும்…

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி… பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம்

ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், சவுராஷ்டிர அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட பெங்கால் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.போட்டியில் டாஸ்…

IND v AUS: மீண்டும் காப்பாற்றிய லோயர் ஆர்டர்; சவாலாக மாறியிருக்கும் 2வது டெஸ்ட்டை இந்தியா வெல்லுமா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின்…

விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி | Sulakshan Kulkarni appointed Tamil Nadu coach

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி: 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு சீசனுக்கான தமிழக கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக் ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சுலக் ஷன் குல்கர்னி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 65 ஆட்டங்களில் 3,332 ரன்களை சேர்த்துள்ளார் சுலக் ஷன் குல்கர்னி. இளையோர் தடகள போட்டி:தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 4-வது…

கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு… வன்முறையாக மாறிய ரசிகர்கள் போராட்டம்… கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் செமராங் அணிக்கும், பெர்சிஸ் சோலோ அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. டெர்பி போட்டிக்கான அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் அளவிலான டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்டன. மற்றவர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.அக்டோபரில் மலாங்கில் நடந்த போட்டியில் 135 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்  பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்களைத் தடை செய்ய போலீஸார் வியாழக்கிழமை முடிவு செய்ததாக மாகாண ஆளுநர் கூறினார்.  விளையாட்டை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,…

IND v AUS: புஜாராவின் 100வது போட்டி, அஷ்வின் – ஜடேஜாவின் இமாலய சாதனைகள்; முதல் நாள் ஆட்டம் எப்படி?

பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்படும் புஜாராவுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல். இந்தப் போட்டிதான் அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி.ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனமான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கியிருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தினார். புஜாரா, எப்போதும் போல் அடக்கமாக, “உங்களைப்…

PSL | 36 பந்துகளில் 75 ரன்கள்; பெஷாவரை துவம்சம் செய்த ரைலி ருசோவ் | psl 75 runs 36 balls rilee rossouw who destroyed peshawar

முல்தான்: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 36 பந்துகளில் 75 ரன்கள் விளாசியுள்ளார் ரைலி ருசோவ். இதற்கு முந்தைய போட்டியில் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 78 ரன்களை அவர் எடுத்திருந்தார். பெஷாவர் அணிக்கு எதிரான போட்டியில் முல்தான் அணி வீரர் ஷான் மசூத் அவுட் ஆனதும் களமிறங்கினார் ருசோவ். வந்தது முதலே அதிரடி ஆட்டத்தை துவங்கினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்களை குவித்து அவுட்டானார். 12…

1 301 302 303 304 305 444