மதுரைவாசிகளை சுண்டி இழுக்கும் தேர்முட்டி முட்டை போண்டா கடை.. உடனே போங்க!
மற்ற ஊர்களை விட மதுரையில் விதவிதமான உணவுகளும், அவற்றின்சுவையும் தரமும் அற்புதமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.அந்த வகையில் மதுரை தேர்முட்டி அருகே முட்டை போண்டா சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் ஒரு சாலையோர கடையை தேடிச் செல்கிறது.மதுரை அம்மன் சன்னதி பகுதியில் தேர்முட்டி அருகில் சுமார் 25 வருடங்களாக இக்கடை இயங்கி வருகிறது.இக்கடையின் உரிமையாளர் சின்ன கருப்பன் கூறும் பொழுது, ”இக்கடையை நாங்கள் 25 வருடங்களாக நடத்தி வருகின்றோம் இக்கடையின் ஸ்பெஷல் என்னவென்று கேட்டால் முட்டை போண்டாவும்…









