Browsing: சமையல் | Recipes

எந்த கார்போஹைட்ரேட்டுகள் நல்லவை? எவை தவிர்க்க வேண்டியவை? | Which Carbohydrates Are Good and Which Are Bad? A Complete Guide

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்.…

பீர்க்கங்காய் அடை முதல் வெங்காய துவையல் வரை; மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகள்!

ஆரோக்கியம் நம் உணவுப்பழக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. நாம் மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகளை, செய்முறையுடன் நினைவூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் பத்மா. இஞ்சி, பருப்பு துவையல்இஞ்சி, பருப்பு துவையல்தேவையானவை: இஞ்சி – 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு… பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி,…

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

நோயை எதிர்த்து போராடும்வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.இந்த வகை அரிசியை உற்பத்தி செய்ய பிகாமாரு மற்றும் கோஷிஹிகாரி ரக நெல் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடமிருந்து…

Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!

இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சமையற்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.1. வாழைப்பூ சீரகக் கஞ்சிவாழைப்பூ சீரகக் கஞ்சிதேவையானவை: வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், பாசிப்பருப்பு – 2…

மழைக்காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்; எவற்றை தவிர்க்க வேண்டும்? | What foods can be eaten during the rainy season; which ones should be avoided?

தயிர், மந்தமான உணவுகள், கிழங்கு வகைகள், காராமணி, மொச்சை, கீரை வகைகள், மா,பலா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், சீதாப்பழம், வெண்பூசணி, புடலங்காய், காலிஃப்ளவர், கோஸ், காளான், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும். பச்சையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழைய, மீந்து போன, ஆறிப்போன உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவுகள் தவிர்க்கவும்.காலையில் சுக்கு மல்லி காபி, ஆவியில் வேகவைத்த சிற்றுண்டி,…

முருங்கை முதல் சிவப்பரிசி வரை; மழைக்கேற்ற 4 ஹெல்தி சூப்!

விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்! மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ என்று அறிவித்தால் போதும்… வீட்டில் இருப்பவர்கள் டி.வி-யையும், கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் ஒரு கணம் மறந்துவிட்டு, ‘சீக்கிரம் கொண்டு வா! என்று சாப்பிடும் இடத்தில் ஆஜராகிவிடுவார்கள். வித்தியாசமான 4 சூப் வகைகளை இங்கே செய்துகாட்டியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் ர. கிருஷ்ணவேணி. பேபிகார்ன் – மஞ்சள்பூசணி சூப் பேபிகார்ன்…

தீபாவளி : பாரம்பரியம் மாறா செட்டிநாட்டுப் பலகாரங்கள் – இன்றும் எப்படி தனித்து நிற்கின்றன?

வாடிக்கையாளர்களை கவரத் துரித உணவுகளின் வெரைட்டி அதன் தேவைக்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும் வேளையில், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு இன்று மவுசு அதிகம் உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் தனித்துவமாகக் கருதப்படுவதில் கட்டடக்கலைக்கும் உணவு வகைக்கும் தனி இடம் உண்டு. . பாரம்பரிய சுவை, பாரம்பரியத் தயாரிப்புகளால் தனித்து நிற்கும் செட்டிநாட்டு பலகாரங்கள் உலக அளவில் புகழ்பெற்றவையாக உள்ளன. இந்தச் செட்டிநாட்டு பலகாரங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…

Deepavali: அதிரசத்தோட ரூல் புக் படிச்சிருக்கீங்களா? இது அதிரசத்தோட Nostalgia பகிர்வு

அதிரசம்… பேர் என்னவோ இனிப்பு பலகாரம்தாங்க. ஆனா, இது வாங்குற வேலையிருக்கே… அப்பப்பா..! இன்னிக்கு ஆர்டர் போட்டா இனிக்க இனிக்க வீடு தேடி வந்திடுது அதிரசம். ஆனா, கால் நூற்றாண்டுக்கு முன்னாடி வரைக்கும் தீபாவளிக்கு அதிரசம் சுடுறதுங்கிறது மிகப்பெரிய டாஸ்க். சென்ற தலைமுறையினர் அதிரசம் செய்ய பட்டபாடுகளையாவது நாம தெரிஞ்சுக்கலாமா..? அதிரசம்அதிரசத்தோட ரூல் புக்..!முதல்ல அதிரசத்தோட ரூல் புக்கை படிச்சிடுவோம். இளம் பிரவுன் நிறத்துலதான் இருக்கணும். ஒரு செகண்டு அதிகமா வெந்துட்டாலும் தீய்ஞ்ச நிறம் வந்துடும்.கையில எடுத்தா…

இருமல், சளி குணமாக்கும் தங்கக் கஷாயம் – Golden kashayam to cure coughs and colds

ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த “தங்க கஷாயத்தைக்’ கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன். இந்தக் கஷாயத்தின் செய்முறையையும், பலன்களையும் இங்கே விவரிக்கிறார் அவர். ‘தங்கக் கஷாயம்’தேவையானவை: மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம…

சவேரா ஹோட்டலில் நடைபெற்ற ஃபுடாதான் 4.0 டி-ஷர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு விழா

“நோ ஃபுட் வேஸ்ட்” நிறுவனம், பங்காளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, வரும் ஃபுடாதான் 4.0 நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை சென்னையின் சவேரா ஹோட்டலில் வெளியிட்டது.ஃபுடாதான் 4வது பதிப்பு, வரும் 28 செப்டம்பர் 2025 அன்று மயாஜால், ஈசிஆர், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஓட்டப்பந்தயம் “உணவு இழப்பு மற்றும் வீணாக்கத்தை குறைப்பது” என்ற வலுவான செய்தியை எடுத்துரைக்கிறது. உணவின் பொறுப்பான பயன்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்க சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.ஃபுடாதான் 4.0விழாவில் தமிழ்நாடு…

1 3 4 5 6 7 184