Ananda Vikatan – 25 July 2018 – கச்சப் பொடி மீனுடன் ஒட்டு மாங்காய்; மண்பானை சமையலில் ஒரு புல் மீல்ஸ்! சோறு முக்கியம் பாஸ் – 21 | Food: Karur – Sri Muruga Vilas – Ananda Vikatan
நினைத்தாலே வாயூறுகிறது. கச்சப் பொடி மீனை நன்கு உப்புப் போட்டு அலசி, ஒட்டு மாங்காயை வெட்டிப் போட்டு மண்சட்டியில் வைக்கும் கெட்டியான குழம்பை இரண்டு நாள்கள் வைத்திருந்து சாப்பிடலாம். புளிய விறகின் காந்தலும், மண்சட்டியின் மூலக் கூறுகளும் சேர்ந்து குழம்பை அமுதமாக்கிவிடும். சிலர், பழங்கஞ்சியைப் பாத்திரம் நிறைய வைத்துக்கொண்டு, `ஒரு கவளத்துக்கு ஒரு வாய்’ என மீன் குழம்பை உறிஞ்சிக் குடிப்பார்கள். அடடா..! இன்று ஆசைப்பட்டாலும், மண்பாத்திரக் குழம்புகள் வாய்க்காது. மண் அள்ளுவதில் தொடங்கி, பாண்டங்களைச் சுடுவதுவரை…








