உணவுக்கு முன்பு அல்லது பின்பு எப்போது ஸ்வீட் சாப்பிட வேண்டும் ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும்போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை…