Browsing: அரசியல்

கொளத்தூரில் ரூ.111.80 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் என கொளத்தூரில் நடைபெற்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். முதலாவதாக கொளத்தூரில் இயங்கி வரும் கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்…

114வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்த நாளான வரும் 15ம் தேதி மதுரையில் அவரது  சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ் நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல்…

விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஈபிஎஸ் அறிவிப்பு

சேலம்: அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் கூறினார். Source link

நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதியில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எல்லா அதிகாரமும் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். Source link

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி நேற்று பதில் மனு அளித்தார். அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் சாவியை ஒப்படைக்கக்கூடாது என பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக…

வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்ய முடியும்: காங்கிரஸ் மீது அமித்ஷா தாக்கு

ஜெய்ப்பூர்: ‘காங்கிரசால் வாக்கு வங்கி அரசியல்தான் செய்ய முடியும். வளர்ச்சிக்கு எல்லாம் வாய்ப்பில்லை’ என்று அமித்ஷா விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் அவர் (ராகுல்) ஆற்றிய உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? இது லட்சக்கணக்கான மக்கள் தங்கள்…

தேசிய அளவில் புது கட்சி சந்திரசேகர ராவ் திட்டம்: தசரா தினத்தில் அறிவிப்பு?

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  புதிய தேசிய கட்சி துவங்க வேண்டும் என்று அவரது கட்சி பிரமுகர்கள் அவரை வலியுறுத்தி  வருகின்றனர். அக்டோபரில் வரும் தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் முதல்வராக சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கும், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.  சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்க்க, தேசியளவில்…

உபி.யும், பீகாரும் ஒன்றாக இணைந்தால் மோடி காலி: சமாஜ்வாடி பேனரால் பரபரப்பு

லக்னோ: பீகாரில் பாஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். மேலும், பாஜ.வுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாகவும் அறிவித்தார். அதன்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, உபி முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோரை சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார். இந்நிலையில், லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே…

இந்திய ஒற்றுமை பயணம்: தனது 5 வது நாள் நடைபயணத்தை கேரளாவில் தொடங்கினார் ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: கேரளா, செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் யணத்தை நிறைவு செய்த நிலையில், இன்று கேரளாவில் தொடங்கியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை…

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது: 5 எம்பி.க்களின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என்று 5 எம்பிக்களின் கோரிக்கையை தேர்தல் பணிக்குழு நிராகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடவில்லை என்றால், சசிதரூர் உட்பட பலர் போட்டியிட தயாராக உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி.க்களான சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்டோலோய், அப்துல் காலிக் ஆகிய 5…

1 95 96 97 98 99 161