Browsing: அரசியல்

முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது: ஆளும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி நேற்று முன் தினம் முன்னாள்…

சொல்லிட்டாங்க…

* காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் ‘விலகும் யாத்திரை’ கோவாவில் இருந்து தொடங்கி உள்ளது. – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்* இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி அடைந்து வருவதை பார்த்து ஆளும் பாஜ உடனே காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுவதாக தகவல் கிடைத்தது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. – டெல்லி முதல்வர்…

மதுக்கடைகளை மூடி விடுங்கள்… மாணவச் செல்வங்கள் சிறக்கட்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை: வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

சட்டரீதியாக போராடுவோம் எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட…

ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கவர்னர் முயற்சிக்கிறார்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். கரூரில் சட்டத்திற்கு விரோதமான மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும் கல்குவாரி  மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. கல்குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்திய…

ராகுல் நடைபயண நிதி வசூலில் முறைகேடு விவகாரம் காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் மோதல்: கணக்கு கேட்க டெல்லி மேலிடம் திட்டம்

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவர், 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தற்போது ேகரளாவில் பயணம் தொடர்கிறார். தமிழகத்தில் அவரது நடைபயணத்தை பிரமாண்டமாக நடத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. இதை கட்சி தலைமையில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் பங்கெடுத்து செய்தனர். இதுதவிர, கட்சியில் உள்ள தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் என பலரிடமும்…

சொல்லிட்டாங்க…

* ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்* தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே ஒன்றிய பாஜவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே…

வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வேலுமணி, விஜயபாஸ்கர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப,…

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பேராதரவு; மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது. இந்த பயணத்தில் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவு…

அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: எடப்பாடி பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டி, பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி,பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடக்கும். பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதால்,அவரை நீக்கினோம். அவர் மக்கள்…

1 94 95 96 97 98 161