Browsing: அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு(பொறுப்பு) அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணை தூதர் எட்கர் பாங், எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் டிவிசன் முதுநிலை இயக்குனர் பிரான்சிஸ் சாங் ஆகியோர் உடன்…

15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்: மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு, முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…

சொல்லிட்டாங்க…

* சிறுத்தைகளை நாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டும் போதாது. மக்களின் பிரச்னைகளை மோடி தீர்க்க வேண்டும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கும் மனமாற்றம் வட இந்தியர்களுக்கும் எம்பிக்களுக்கும் இன்னமும் ஏற்படவில்லை. தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்* வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சிகளுக்கு இடமில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்*காங்கிரஸ் கட்சியின் சார்பில் எத்தனை முறை பாதயாத்திரை நடத்தினாலும், அவர்களால் ஆட்சி…

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: அன்புமணி வரவேற்பு

சென்னை: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு கடந்த 2016ம் ஆண்டே ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், அப்போது அந்த சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படவில்லை. இப்போது ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு விரைவாக செயல்வடிவம் தர வேண்டும். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலைவேடர்கள், தர்மபுரி, திருவண்ணாமலை…

திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல்  செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Source link

ஓபிஎஸ் சந்தித்ததன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரனால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார் கருத்து

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்ததால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாவிற்கு சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் பதில் அளிப்பார். ஆனால் இங்கே அதை எல்லாம் அடக்குமுறைகள் மூலமே செய்யப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன்…

திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி உயர்வு குறித்து பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறியது எனவும் விளக்கம் அளித்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* தாய்மார்களும், சகோதரிகளும்தான் எனது வலிமையும், உத்வேகமும் ஆவர். – பிரதமர் மோடி* பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் பாஜ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி * கவர்னர் பதவிக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. அந்த பதவியில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று கருதக்கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்* காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தையும், தேசிய பிரச்னைகளையும் மூடி மறைக்க மோடி…

கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: கோடநாடு வழக்கை திசை திருப்பவே பொய் புகார்களை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா தொற்றில் இருந்து அனைவரையும் காப்பாற்றி மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அனைத்து தரப்பிலும் பாராட்டுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15 மாதங்களை கடந்து சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. சொத்து வரி…

விரைவில் உண்மை வெளி வரப்போகிறது கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துள்ளன: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை பார்த்து தாங்கி கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மின்கட்டணம் உயர்வு குறித்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து பேசியிருக்கிறார். கொட நாடு வழக்கு மிகவும் சீரியசாக போய்க் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கொட நாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கொடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி…

1 92 93 94 95 96 161