Browsing: அரசியல்

அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை..!

சென்னை: அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், முதலமைச்சருக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி…

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில், புதிய அமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் டிச.29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு  ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. உலகத்தில் பல நாடுகள் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கிறது. அதேபோல இந்தியாவும் இந்து நாடு, திருக்குறள் இந்து மதத்தின் நூல் என பேசுகிறார். ஆன்லைன்…

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட கேரளா முயற்சி ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்க வேண்டும் என்று அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்…

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு; இபிஎஸ் புறக்கணிப்பு: மோடி, அமித்ஷா சந்திக்காததால் பதிலடி

சென்னை: குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார். அழைப்பு விடுக்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டார். டெல்லி சென்றபோது மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதாலேயே எடப்பாடி குஜராத் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. இதையடுத்து பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.குஜராத், காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அத்துமீறிய, ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி காட்டம்..!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அத்துமீறிய, ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு…

அதிமுக அறிவிப்பு 15 மாவட்டங்களில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில்…

மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர் மாதம் பெய்த கன மழையினாலும் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. அனைத்துத்துறை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, இதற்கான…

சொல்லிட்டாங்க…

இப்போது புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். கவர்னர் ஆட்டி படைக்கக்கூடிய வகையில் நடக்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்துளி அளவும் ஊழலுக்கு இடம் தராமல் இருக்க வெளிப்படைத்தன்மை சட்டம் கொண்டு வரப்படும். – இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுதேர்தல் போரில் காங்கிரசால் பிரதமரை எதிர்கொள்ள முடியாது. இதனால் அவரை கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகிறார். – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஜி-20 மாநாடு நமது…

அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவை தொடர்பாக அரசைக் கண்டித்து, அதிமுக ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு , திருப்பத்தூர்,…

1 51 52 53 54 55 161