குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் தேர்வாகும் பூபேந்திர படேல்
ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்க வசதியாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் ஒப்படைத்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜ கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி …









