Browsing: அரசியல்

குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி; 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

காந்திநகர்: குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மொத்தமுள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், 156 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 7வது முறையாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த 1995ம் ஆண்டு ெதாடங்கிய பாஜகவின் வெற்றி…

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை: பிரச்னையில் சிக்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை; பாஜ தலைவர் எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன், மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில…

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி  பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்துள்ளது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில்: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காகக் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது…

ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் தோல்வி; குஜராத்தில் கடினமான முடிவுகள் எடுக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி; குஜராத்தில் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அங்கு கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை  குஜராத் முடிவுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியதையும், கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகின்றன. ஏனெனில் குஜராத்  தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன.  எங்கள் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக உள்ளன. இது குஜராத் கட்சி அமைப்பின் பாதிப்பு…

இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்பு

சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சுக்விந்தர் சிங்குக்கு இமாச்சலபிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நடந்த இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. சுக்விந்தர் சிங் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.  கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை…

இமாச்சல் புதிய முதல்வர் யார்?; காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை: கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம்

சிம்லா: இமாச்சல் புதிய முதல்வரை தேர்வு செய்யும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சித்தலைவர் கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில்…

இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார். 2013 முதல் 2019 வரை இமாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக சுக்விந்தர் சிங் சுகு பதவி வகித்தவர் ஆவார்.   Source link

மகாராஷ்டிரா-கர்நாடகா முதல்வர்களுடன் அமித்ஷா 14ல் பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய போது, மகாராஷ்டிரா பதிவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். பின்னர் பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்பி அமோல் கோல்கே, ‘‘இரு மாநிலங்களின் முதல்வர்களுடன் வரும்…

திமுகவில் இணைந்தார் அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். கோவை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளராக செந்தில் கார்த்திகேயன் பொறுப்பு வகித்தார். Source link

புயல் வரும் நாளில் சாலையில் பாஜக கொடி கட்டிய விவகாரம்: அண்ணாமலை வருத்தம்..!

சென்னை: புயல் வரும் நாள் அன்று நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்திருந்த பாஜக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை; உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார். Source link

1 52 53 54 55 56 161