Browsing: அரசியல்

அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

மதுரை: 2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்ராவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கனது தொடரப்பட்டுருந்தது. கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 – 2020ம் ஆண்டில் அதிமுக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து உத்தரவிட கோரி அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது…

போதை மருந்து கடத்தல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவலா?.. கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல்…

சொல்லிட்டாங்க…

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றால் அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பார்க்க முடியும். :- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மோடியின் ஆட்சி முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க ராகுல்காந்தி நடைபயணம் செல்கிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை…

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

2024 நாடாளுமன்ற தேர்தலின் அரையிறுதி போட்டியாக கருதப்படும் 2023ல் 9 மாநிலங்களின் பேரவை தேர்தல் எப்போது?: அரசியல் தலைவர்களின் புது வியூகங்களால் பரபரப்பு

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்தாண்டுக்கான ஒன்பது மாநில தேர்தல்கள் உள்ளன. அதனால் அரசியல் தலைவர்கள் தங்களது தேர்தல் வியூகங்கள் குறித்து பேசிவருகின்றனர். இன்று 2023 புத்தாண்டு தொடங்கிய நிலையில் இந்தாண்டுக்கான அரசியல் வியூகங்களும் பின்தொடர்கின்றன. இந்தாண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின் 2024ல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும். அதனால் இந்தாண்டு நடைபெறும் 9 மாநில தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாக இருக்கும்…

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பாஜவுக்கு எதிராக மறைமுக எதிர்ப்பலை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ராகுல் அழைப்பு

புதுடெல்லி: ‘பாஜவுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பலை நிலவுகிறது. ஆனால் இது வெளியில் தெரியாமல் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா…

அமித்ஷா அறிவிப்பு கர்நாடகா தேர்தலில் பாஜ தனித்து போட்டி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜ 108 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில், 2023ல் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய…

சொல்லிட்டாங்க…

கர்நாடக தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி. பாஜ தனித்து போட்டியிடும். :- உள்துறை அமைச்சர் அமித்ஷாஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது மட்டுமில்லாமல், அது ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது. : – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திநாட்டில் பாஜவுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது. :- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமக்கள்…

ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு‘ஒய் பிளஸ்’ தேவையா?: தேசியவாத காங். மூத்த தலைவர் காட்டம்

மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் 35 எம்எல்ஏக்களுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு தேவையா? என்று தேசியவாத காங். மூத்த தலைவர் அஜித் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா அரசின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத மூத்த தலைவருமான அஜித் பவார் பேசுகையில், ‘சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்துள்ள 30 முதல் 35 எம்எல்ஏக்களுக்கு…

கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடித விவகாரம்; ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு புதிய ஆபத்து?: சபாநாயகருக்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நெருக்கடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகல் கடிதம் கொடுத்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால், அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. ஒருவேளை அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அவர்…

1 42 43 44 45 46 161