இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிகளில் ஓபிஎஸ்சுக்கு தனியரசு ஆதரவு: பொதுச்செயலாளராக வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. இவர், கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று வந்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் வெளியில் வந்த…









