Browsing: அரசியல்

வேறு பெண்ணை 2வது திருமணம் செய்ததால் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் வீட்டின் முன் காதல் மனைவி தர்ணா

ஆம்பூர்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் 2வது திருமணம் செய்ததால் அவரது ஆம்பூர் வீட்டின் முன் காதல் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கையை சேர்ந்தவர் ஜெயகணேசன் (27). அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா (25). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்துள்ளனர். இதற்கு ஜெயகணேசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2016ல்  வீட்டிற்கு தெரியாமல் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று  ரகசிய திருமணம் செய்து…

பிஆர்எஸ் குற்றச்சாட்டு தெலங்கானாவை மாற்றாந்தாய் பிள்ளை போல் பாஜ அரசு நடத்துகிறது

ஐதராபாத்:  தெலங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடத்துகிறது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ் குற்றம்சாட்டினார். நிசாமாபாத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “ஒன்றிய பாஜ அரசு தெலங்கானாவுக்கு எந்த புதிய திட்டங்களையும், நிதிஉதவியையும் அறிவிக்கவில்லை. ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பாஜ தனது கார்ப்பரேட் நிறுவன நண்பர்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்கிறது. அனைவரின் ஆதரவு, அனைவரின் நம்பிக்கை என்று முழங்கும் பாஜவின் செயல்கள் அனைத்தும் குப்பை.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் -எஸ்.டி.பிரபாகரன் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிபிசி, இந்தியாவில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இதில், குஜராத் கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியும் காரணம் என்பதை தகுந்த சான்றுகளோடு அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான பாசிச பாஜ அரசு, ஆவண படத்திற்கு தடை விதித்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதை பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும்…

ஆட்சி மன்ற குழு வேட்பாளரை முடிவு செய்யும்: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.! செங்கோட்டையன் பேட்டி

சென்னை: சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து…

இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்

சென்னை: மக்கள் நீதி மய்யம்  இணையதள பக்கம் ’ஹேக்’ செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மநீம சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி மக்கள் நீதி மய்யம்  கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் வரும் 30ம் தேதி இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “மக்கள் நீதி மய்யம்  கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்…

சொல்லிட்டாங்க…

* ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்க ஒன்றிய பாஜ அரசு உழைக்கிறது. – பிரதமர் மோடி* வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* நாட்டில் பாஜவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளாக்கப்படும் சூழலில், ஒன்றியஅரசு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த்,…

உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு

சென்னை: இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் சார்பில் கூடுதலாக 5 பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கூடுதலாக 5 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, அமைப்பு செயலாளர்…

1 29 30 31 32 33 161